என் மனதை களவாடிய கள்வன் எனக்கு எதிரே , நான் சொன்ன அதே வெள்ளை நிற சட்டையில்
அவனின் கூரிய விழிகளால் என்னை கூச்சப்பட வைக்கிறான்.
எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் , அருகில் செல்லும் வாகன சத்தம் கூட வயலின் வாசிக்கிறது.
எண்ணெயில்லா தலையிலும் என் தலைவன் எடுப்பாக தான் இருக்கிறான்.
அதீத கருப்புக்குள் ஆவியை முக்கி எடுத்த நிறம்.
எனக்கு தெரிகிறது இன்னும் சிவக்காத அவன் இதழ்கள் , சிவந்த என் இதழ்களை தேடிக்கொண்டிருக்கிறது.
ஆன்மீகமே அறியா நாத்திகன் கையில் சிவப்பு கையிறு , அவன் அம்மாவின் ஆசைக்காக
அதுகூட அழகுதான்.
அதுகூட அழகுதான்.
எவ்வளவு நாள் காத்துக்கிடந்தேன் உன்னைக்கான , என்னை கண்டதும் இப்படி பம்புகிறாயே கயவா ?
நெற்றியின் ஒரம் வியர்வை துளிகள் உன்னை தடவிக்கொண்டே செல்கிறதே ?
நான் கண்ட நொடி அவை அனைத்தும் மண்ணிற்குள் மடிகிறதே
கிராதகா , எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக்கொண்டிருப்பாய்.
என் இதழ்கள் துடிக்குதடா உன்னுடன் பேச ,
என் உள்ளங்கை மருதானியும் கொஞ்சம் , ஏங்குதடா உன்னை தொட்டு பார்க்க ...
ஆத்திகியாய் இருக்கும் என்னை , நாத்திகியாய் மாற்றிவிடு , உன் இதழ் கொண்டு என் திருநீரை அழித்துவிடு.
"ஏன் சிரிக்கிறாய் என்று தெரியவில்லை , ஆனால் உன் சிரிப்பில் என் தேகம் சிலிர்குதடா.
உன் ஆண்மையின் கம்பீரம் இன்று ஒருநாள் என் முன் மடிந்துகிடக்கிறதே , நான் என்ன அவ்வளவு அழகா ?
சொல்லடா , கிராதகா
சரி , போகட்டும் நானே பேசுகிறேன் , என் இதழ்களுக்கும் பொருமை உண்டு.
"ஏன் , சிரிக்குற"
"உனக்கு , தெரியாதா"
"தெரிஞ்சுக்க தான , கேக்குறாங்க"
"ஏன் , இவ்வளவு அழகா இருக்க "
"ஓ , அதுக்குதான் சிரிக்கிறியா"
"அப்படி இல்ல , என்னன்னு தெரில உன்ன பாத்ததும் பேச்சு வரல "
"டேய் , நாம ஆல்ரெடி லவ் பண்றோம் டா , ஏதோ ப்ரபோஸ் பண்ண வந்த மாறி இப்படி வெட்க படுற"
"என்ன , எப்ப கல்யானம் பண்ணிப்ப" என்றான் வெட்கம் தவிழ
"டேய் லூசு , நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் , நீ என்ன சொல்லிட்டு இருக்க"
"சரி , என்ன பிடிச்சிருக்கா ?
" பிடிக்கலைன்னா , உன்ன விட்டுட்டு ஓடிருவேன்னு நினைச்சயா ?
"எனக்கு எப்பவுமே நீ மட்டும் தான்டா" என் செல்ல கிராதகா..
"சரி , எங்க போலாம் டீ"
"நான் எங்க வீட்டுக்கு போறேன் , வர்ரியா ?
" நான் ரெடி டீ , இவன் தான் , உங்க வருங்கால மாப்பிளைன்னு இன்ட்ரோ கொடுக்கிறையா ?
"ஆசை தான்"
அவன் விழிகள் என்னை ஏதோ செய்கிறது.என்னால் உணர முடிகிறது.
என்னை உன்னுடனே அழைத்து சென்றுவிடு என்றும் கூட சொல்ல துணிகிறது.
காதலுக்கென்று கட்டப்பட்ட அந்த ஐஸ்கிரீம் அறைக்குள் ,
என்னை முழுதும் களமாடிய கள்வனுக்கு எதிரே நான் மட்டும்.
என்னை முழுதும் களமாடிய கள்வனுக்கு எதிரே நான் மட்டும்.
கண்களில் காதல் செய்வதில் அவன் ஒரு கிராதகன் தான்.
Comments
Post a Comment