அதே சிவப்பு நிற சுடிதார் , சாலையின் ஓரம் , கொஞ்சம் பரபரப்போடு ,
நான் பார்த்துவிட்டேன் ,
பவளவிழா பதுமையை போல , அவள் விழிகளை கவசத்தால் மறைத்திருக்கிறாள்.
பவளவிழா பதுமையை போல , அவள் விழிகளை கவசத்தால் மறைத்திருக்கிறாள்.
மாநிறத்திற்கு கொஞ்சம் நிமிர்ந்த நிறம்.
காதில் கடுகளவு ஒரு தோடு..
சாயம் பூசிராத இதழ்கள்..
சாயம் பூசிராத இதழ்கள்..
அவள் நகங்களை சுவைத்து சுவைத்தே மிளிர்ந்து போன அவள் பற்கள்.
விரித்தாடும் உலகில் பின்னிய ஜடையில் அவள் கூந்தல்.
கிராதகி , அவள் கையிலிட்ட மருதானியை கூட சிவக்க வைத்திருக்கிறாள்.
ஆத்திகத்தின் ஆன்மீகத்தை அவள் நெற்றிக்கு நடுவே ஒட்டவைத்திருக்கிறாள்.
என்னவளின் கையை கட்டி அணைந்திருந்தது அவள் கட்டிய கடிகாரம்.
நான் பார்த்துவிட்டதால் என்னவோ, நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறது அதே கடிகாரம்.
ஐயோ அவளை எப்படி வர்ணிப்பேன். வார்த்தைகளற்ற மூடனாயிற்றே நான்.
ஒரு வருடம் முகமில்லை என் காதலுக்கு.நான் வணங்காத இறைவன் இன்று தான் வரைந்திருக்கிறான் , அதுவும் அழகாக , மிக அழகாக.
இதற்கு மேல் காத்திருக்காது என் கால்கள் , அவளை பார்க்க வேண்டும்.
அருகில் இருந்தவாரே அவள் அழகை ரசிக்க வேண்டும்.ரசித்து கொண்டே ரசனையில் சுரக்க வேண்டும்.
படப்படத்த என் கைகள் அலைபேசியை தொடும் முன்னே..
என்னவளின் அழைப்பு , அவள் அழகை ரசித்து கொண்டே "ஹலோ , என்றேன்.
" எங்கடா இருக்க , வந்துட்டையா ?
"நான் அப்பவே வந்துட்டேன் , உன்ன தான் ரசிச்சுட்டு இருக்கேன்"
அங்கிங்கும் விழிகளை சுழற்றியவாரே "டேய் , ப்ராடு எங்கடா இருக்க ? சொல்லு டா
"கிராதகி , நீயே கண்டுபிடி டீ "
"டேய் சொல்லு டா ப்ளீஸ் , எங்கடா இருக்க "
"கிராதகி செம , அழகா இருக்க டீ "
"டேய் , லூசு எங்கதான்டா இருக்க , சொல்லி தொல டா "
"கண்டுபிடி டீ , என்ன காதலிச்ச கள்ளச்சி"
"இப்பவுமா என் அழக ரசிக்கிற , கொஞ்சம் அப்பிடியே , உன் பின்னாடி பாரு " என்றாள்.
பிரமித்த அவள் விழிகள் கவசத்தை கடந்து அவளின் கள்வனை கருவிழிக்குள் நகர்த்தி சென்றது.
அவளின் விழியை பார்த்த , இவன் விழிகள் அசையாமல் நின்றது.
நிச்சயம் , இவள் ஒரு கிராதகி தான் ஒற்றைப்பார்வையில் இப்படி கிரங்கடிக்கராலே என்று எண்ணியவாரே பார்த்து கொண்டிருந்தான்.
Comments
Post a Comment