அதே டீக்கடை தான் எந்த மாற்றமும் இல்லை.மாலைநேர டீ கிளாஸ் உடன் நானும் மாறவில்லை.நாட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது.
வேலைதேடி சென்னை வந்து 30 நாட்கள் ஓடிவிட்டது.30 நாட்களில் வெவ்வேறு உருவங்கள் ஆனால் பதில் ஒன்றுதான் "நாங்க கால் பண்றோம் Mr.கார்த்திக்". கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது.
வேறு வழியில்லை தேடி தான் ஆகவேண்டும்.வீட்டிற்க்கு முதல் வாரிசு ஆயிற்றே.
நாளையும் ஒரு இண்டர்விஎவ்(Interview) .பெரிய MNC கம்பெனி. ஆனால் நிச்சியம் கடினமாக தான் இருக்கும்.அதற்கேற்ற மூளை என்னிடம் இல்லை.இருந்தும் ஆசை யாரை விட்டது.நாளை அந்த கம்பெனி இக்கு செல்ல வேண்டும் என்று இன்று வெளியே அனுப்பிய கம்பெனி வாயிலிலே முடிவு செய்து விட்டேன்.
கையில் 350 ரூபாய் தான் உள்ளது.இதை வைத்து தான் இன்னும் 7 நாட்களை நகர்த்த வேண்டும். அதற்குள்ளே ஒரு வேலை கிடைக்க வேண்டும்.
படித்து முடித்து இவ்வளவு நாட்களும் என் அப்பாவின் பணத்தில் தான் வாழ்கை ஓடிகொண்டிருகிறது.இனியும் அவரிடம் கேட்க முடியாத அழுத்தத்தில் தான் என் மனது உள்ளது.
இதே சிந்தனையில் கையிலிருந்த டீ யும் வயிற்றை நிரப்பியது.டீ கிளாஸ்யை வைத்துவிட்டு 8 ரூபாய் சில்லறையை தேடினேன்.
அதற்குள்ளாகவே உரக்க கத்தியது ஆறுமுக அண்ணாச்சியின் குரல் " என்ன ஆச்சு பா , இன்னைக்கு வேலை தேடி போயிருந்த"
தயங்கிய குரலுடன் " சொல்றேன் இன்னு சொல்லிருகாங்க அண்ணே " என்று கூறிய வாரே மாலை நேர செய்தித்தாளை புரட்டினேன்.
"பாவம் , இந்த புள்ளையும் வந்து ஒரு மாசம் ஆச்சு இன்னும் ஒரு வேலை கிடைக்கல" என்று அனுதாப துதியை தூவி இரைத்தது அண்ணாச்சியின் மனைவின் குரல்.
சரி கிளம்பலாம் என்று மெதுவாய் நடந்தேன்.சுடிதார் அணிந்த தேவதைகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.பார்த்தும் பார்க்காதவன் போல் தலையை குனிந்து கொண்டு தாரகையை பார்க்க வேண்டிய வயதில் தார்சலையை தரிசனம் செய்துகொண்டே நகர்ந்தேன்.
"தம்பி , கார்த்தி " என்ற ஒரு குரல்.
திரும்பினால் , நான் தினமும் உணவு உண்ணும் டிபன் கடைக்கார அக்கா " சொல்லுங்க கா " என்றேன்.
"இல்ல பா , சொந்தகார பையன் ஒருந்த இறந்துட்டான் , அது தான் நான் அண்ணா ரெண்டு பெரும் கிளம்புறோம் , வர ரெண்டு நாள் ஆகும் , ரெண்டு நாளைக்கு வேற எங்கையாவது சாப்டுகோ பா " என்றார்.
"சரி கா , நீங்க பார்த்து போயிட்டுவாங்க " என்று சொல்லிவிட்டு மீண்டும் நகர்ந்தேன்.
சென்னை வந்த ஒரு வாரத்திலே அந்த கடைக்கு 1000 ரூபாய் முன்பணமாய் கொடுத்திருந்தேன். அதை வைத்து தான் மீதிருக்கும் 7 நாள் தவிர்த்த ஒரு மாதத்தை ஓட்டினேன்.
அதுவும் காலை , மாலை மட்டும் தான் அக்கடையில் உணவு. மதிய உணவை கொஞ்சம் நகர்த்தி மாலை நேர டீ யாக குடிக்கும் பழக்கத்தை சென்னை வந்த நான்கே நாட்களில் பழகி கொண்டேன்.
கையில் 350 ரூபாய் தான் உள்ளது.இன்னும் இரண்டு நாட்கள் உணவு செலவு வேறு. நாளை இண்டர்விஎவ்(Interview) செலவே 100 ரூபாய் வந்து விடும்.
சரி வீட்டில் கேட்கலாம் என்றாலும் , கேட்க ஒரு தயக்கம் , நண்பர்களிடமும் வாங்க முடியாது மாத கடைசி வேறு.சரி என்னசெய்வது என்றவரே என் கால்கள் மேலும் நடந்தது.
ஏதோ ஏதோ சிந்தனை என் மண்டைக்குள் குடைந்து எடுத்தது.என்ன செய்வதென்றே புரியாமல் நடந்து கொண்டிருந்தேன் .
நிசப்த அமைதியில் என் அலைபேசி அலறியது.ஏதோ Landline நம்பர் , பொதுவாக அது போன்ற நம்பர் இல் இங்கே வேலை உள்ளது அங்கே வேலை உள்ளது என்று கடுபேற்றவே அழைப்பார்கள்.
இருக்கிற ரோதனையில் இது வேறு என்று கட் செய்தேன்.
மீண்டும் அதே நம்பர் , கடுப்பில் எதாவது திட்டி விட தான் atten செய்தேன்.ஆனால்
"This is Karthick"
"yes , whose this"
"We are Calling From Secondworld Pvt Ltd"
"yes , tell me "
"you are selected for the Application Analyst position , we will already send a confirmation mail. so please go through the mail . Thank you "
"okay , Thank you "
என்றவுடன் அழைப்பு துண்டானது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.கனவா , நினைவா என்று ஏதும் புரியாதவனாய் வேகமாக அருகில் இருந்த browsing சென்டருக்குள் நுழைந்தேன்.
"அண்ணா , Browsing " என்றேன்
"Server down ல இருக்கு பா , இப்ப பாக்க முடியாது "
"சரி னா , அண்ணா ஒரு சின்ன help னா "
"என்ன பா "
"ஒரே ஒரு மெயில் செக் பண்ணனும் , உங்க மொபைல் ல பாத்து சொல்றிங்களா"
"சரி Mail idum , Password um சொல்லு "
"Karthick.cse@gmail.com"
"computer science Engineering"
"இந்தா பா , ஓபன் ஆயிருச்சு"
"முதல் mail yae second world pvt ltd ஓட confirmation மெயில் தான் , அத பாத்ததும் பயங்கர சந்தோசம்"
"சம்பளம் எவ்வளவு , என்ன வேலை எதையும் பாக்கல வேலை கிடைச்சிருச்சு அப் போதைக்கு அவ்வளவு தான் என் மனசுக்குல ஓடிட்டு இருந்துச்சு"
"தேங்க்ஸ் , அண்ணா " என்று சொல்லி கொண்டே மீண்டும் டீ கடையை நோக்கி எனது கால்களை நகர்த்தினேன்.
#மாலை #நேர #டீகிளாஸ்
#தொடரும்
Comments
Post a Comment