வெள்ளமென்று சேர்ந்ததடா
ஒரு கூட்டம்...
ஒரு கூட்டம்...
நிச்சயம் கரைவேட்டி
கூட்டமல்ல...
கூட்டமல்ல...
தன் உயிரை துச்சமென்று எண்ணிய களப்பணியாளர் கூட்டம்...
வெக்கமே துளியுமின்றி அதையும் புடுங்கி கொடுத்ததே பல கூட்டம்...
அதை சொல்லிமாளாது
சொன்னாலோ என் எழுத்து தாங்காது...
சொன்னாலோ என் எழுத்து தாங்காது...
உணர்வாலே தமிழனென்று
அவன் தந்த உணவாலே பறையடித்தான்...
அவன் தந்த உணவாலே பறையடித்தான்...
சாதி , மத பேதமெல்லாம் நான் அள்ளும் சாக்கடைக்கு சமானமென்று சத்திரியனாய்
உருவெடுத்தான்...
உருவெடுத்தான்...
அரைத்தூக்க கண்ணோடு அணுஅணுவாய் அவன் வதைந்தான்...
ஆட்சியில் இருப்பவரோ எட்டடுக்கு அறிக்கைவிட்டார்..
அதை எட்டுத்திக்கும் பரவவிட்டார்.
அதை எட்டுத்திக்கும் பரவவிட்டார்.
சோர்ந்திருந்த என் ஜனமோ
சோம்பலை முறிக்குதடா
அரசியலை எதிர்குதடா
அதுவெறும் சோடைப்பேச்சென்று
அடுத்தநொடி உணர்த்துதடா..
சோம்பலை முறிக்குதடா
அரசியலை எதிர்குதடா
அதுவெறும் சோடைப்பேச்சென்று
அடுத்தநொடி உணர்த்துதடா..
Comments
Post a Comment