மூடர்களா நாம் ?
சென்னையின் வெள்ளத்திற்கு சேரிகள் தொடங்கி சேர்த்து வைத்த அனைத்தையும் இழந்த பலதரப்பட்ட மக்கள் அங்கிங்கும் இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க , தமிழக அரசு வெள்ள நிவாரண கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆங்காங்கே பல அரசு அதிகாரிகளை கணக்கெடுக்க அனுப்பியுள்ளது.
அவர்கள் எடுத்த கணக்குகளின் படி நிவாரணம் அளிப்பதும் , நிர்கதியாய் விடுவதும் அரசின் போக்கு.
ஆனால் , வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு என்ற செய்தியை கேட்டதும் , வெள்ளத்தில் பாதிக்கப்படாத பல நல்ல உள்ளங்கள் தாமாக முன்வந்து வெள்ளத்தில் மொத்ததையும் இழந்தது போல் பாவனை செய்வதை தான் சற்றும் ஏற்று கொள்ளமுடியவில்லை.
உதாரனமாக , நான் வசிக்கும் இடத்தில் அவ்வளவு பாதிப்பு ஏற்படவில்லை. வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருந்த அந்த நான்கு நாட்களும் உணவுக்கு மட்டுமே தட்டுப்பாடு , மற்றபடி எந்த பொருட்களும் அடித்து செல்லபடவில்லை , உண்மையில் இங்கு வசிக்கும் அனைத்து சார்பினருக்கும் உடமைகள் அனைத்தும் சிறு கீரலின்றி வைத்தது வைத்த படி தான் இருந்தது.
இன்று எங்கள் பகுதியில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு , அதிகாலை முதலே ஆயத்தமாகிவிட்டனர் அவர்களின் நடிப்பை காட்டுவதற்கு , அவரவர் அவர்களின் தரத்திற்கு குறையாமல் உடமையை இழந்துவிட்டோம் , உயிரை பிடித்துவைத்துள்ளோம் என்று கூப்பாடு போட்டு தங்களின் உணர்வை எழுத்தாக அந்த அரசு அதிகாரியிடம் கூறினர்.
இதில் இடையிடையே பேச்சு வேறு , "சும்மா தர்ரத , வாங்க வலிக்காதூக்கும்" என்று
இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம் , இல்லை கிடைக்காமல் போகலாம். ஆனால் இது மாதிரி சென்னைவாசிகள் அனைவரும் செய்தால் , கணக்கெடுப்பு கணக்கெடுப்பு என்று சொல்லிக்கொண்டே காலம் கடந்து போகும்.
இல்லை , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது பகல் கனவாகவே மாறும்.
ஒன்று மட்டும் புரிகிறது , என் மக்கள் இன்னும் மாறவில்லை.
"சும்மா தர்ரத , வாங்க வலிக்குதா" என்ற வார்த்தையில் மலர்கிறது என் மக்களின் மூடத்தனம்.
"சும்மா தர்ரத , வாங்க வலிக்குதா" என்ற வார்த்தையில் மலர்கிறது என் மக்களின் மூடத்தனம்.
Comments
Post a Comment