"ஏன் , தீடீர்ன்னு கேக்குற டீ" என்றான் அவன்
"இல்ல , நீ சொல்லு" என்றாள் முனகியபடி
இப்ப கூட கல்யானம் பண்ணிக்க நான் ரெடி தான் , உங்கப்பா ஒத்துக்குவாரா ?
ஒத்துக்க மாட்டார்தான் , என்ன பன்றது , எனக்கு உங்கூடவே இருக்கனும் போல இருக்கே ...
ஓ கோ ... என்ன மேடம் எப்பவும் இல்லாம இன்னைக்கு செம லவ் ல பேசுரீங்க ...
ஓ , அப்ப மத்த நாள்யெல்லாம் நான் லவ் வோட பேசுனது இல்லையா ?
ஏய் ," நான் அப்படி சொல்லலடி "
நீ எப்படி சொன்னேன்னு தான் நான் கேட்டனே...
இப்ப என்ன பண்ண சொல்ர , நான் தான் அந்த மீனிங்ல சொல்லலைன்னு சொல்ரேன்ல
உங்கிட்ட வந்து மாட்டுனேன் பாரு என்ன சொல்லனும் , என்றாள் கடுப்பாக
ஆமா , ஆமா இல்லைனா மட்டும் உனக்கு அபிஷேக் பச்சன் கிடைச்சிருப்பாரு பாரு
அத , நீ சொல்லாத டா , போயும் போயும் உன்ன லவ் பண்ணுனே பாரு எண்ண சொல்லனும் ..
யாரு உன்ன லவ் பண்ண சொன்னா ..
இனி உங்கிட்ட பேசிட்டனா பாரு என்றபடி அழைப்பு துண்டானது.
சிரித்தபடி மீண்டும் மீண்டும் ரீடையல் செய்து கொண்டிருந்தான்
அவளின் எண்ணிற்கு...
அவளின் எண்ணிற்கு...
Comments
Post a Comment