செமஸ்டர் லீவிற்காக என் வீட்டில் ஒருவார தஞ்சம்.
யார் எழுப்பினாலும் விழிக்காத என் விழிகள் விடுமுறை நாள் என்றாலே தானாக விழித்து கொள்கிறது.
"என்ன சாமி , அதுக்குள்ள எந்திருச்சுட்டையா ? , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம்ல " என்ற அம்மாவின் குரல் சுப்ரபாதமாய் என் காதுகளை கிளறியது.
"இல்ல மா , தூக்கம் வரல , டீ இருக்கா ? "
"மூஞ்சிய கழுவீட்டு வா சாமி , சூடு பண்ணி வச்சிருக்கேன் "
"ஹம்ம் , என்றவாரே கலக்கத்தோடு மெல்ல நகர்ந்தேன்.
தண்ணீரே படாமல் முகத்தை கழுவும் வித்தையறிந்த சோம்பேறி நான்.அதேபோல் தான் இன்றும் , பட்டும்படாமல் சில நீர்த்துளிகளை இறைத்துவிட்டு உள்ளே நகர்ந்தேன்.
அம்மா ரெடியாக கையில் டீ யோடு நின்றுகொண்டிருந்தார்.
அதை லபக் என்று வாங்கும் போதே ஒரு குரல் " சூடா இருக்கு , பாத்து புடி சாமி " என்று.
"சரி மா , என்றவாரே டி.வி க்கு உயிர் கொடுத்தேன்.அது ஏனோ காலையிலேயே சங்கீதத்தில் பிதற்றிகொண்டிருந்தது.
வழக்கபோல் என் விரல்கள் ரீமோட்டில் கீபோர்ட் வாசிக்க , என் அம்மாவின் விரல்கள் வெங்காயம் அரிந்துகொண்டிருந்தது.
இதில் இடையிடையே என் கிராதகியின் நினைப்பு வேறு என் மனதை வாட்டுவது போல் நடித்து கொண்டிருந்தது.
கீபோர்ட் வாசிப்பில் திளைத்திருந்த என் விரல்கள் தீடிரென்று டி.வி திரையை பார்த்து நின்றது.
இரவு ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சி மீண்டும் காலையில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் தலைப்பு " ஏன் இக்கால பெண்கள் முகத்தில் ஏதோ கட்டிக்கொள்கிறார்கள்" இதெல்லாம் ஒரு தலைப்பாடா இதுக்கு இந்த பக்கம் நாலு பேர் , அந்த பக்கம் நாலு பேர் கருத்து சொல்ல வேற உட்காந்திருக்காங்க , என்று நினைத்து கொண்டே அதை மாற்ற துணிந்தேன்.
அதற்குள் என் அம்மாவின் குரல் " ஏன் சாமி , எதுக்கு பொட்டபுள்ளைக இப்படி முகத்த மூடிட்டு திரியுறாங்க ?"
"இல்ல மா , சிட்டிலைல எல்லாம் காத்துல ரொம்ப டஸ்ட் இருக்கும் , அதுநாள தான் பொண்ணுக மூஞ்சிய கட்டிப்பாங்க "
"ஆனா , எல்லா முகத்க மூடி பசங்களோட தா சுத்துதுக , டி.வி ல தான் காட்ரானே "
"அப்படியும் இருக்கும் மா"
"நீ சொல்ரமாறி பாத்தா இந்த புள்ளைக , அவங்க அப்பா,அம்மா கூட போறப்ப அப்படியா முகத்த கட்டிட்டு போகுதுக , என்னமோ போ , அந்த மகமாயி க்கு தான் வெளிச்சம்.
இதுக்கு நான் என்ன மா பதில் சொல்ல , உலகத்த சுத்தாமையே உலக அறிவு உனக்கு தான் மா இருக்குது.என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டு ,
"அத , விடு மா , ஏன்மா லவ் மேரேஜ் பத்தி என்ன நினைக்குற ?"
"அத தப்புன்னு சொல்லமாட்டேன் , ஆனா நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது சாமி " என்றவாரே நறுக்கிய வெங்காயத்துடன் உள்ளே சென்றாள்.
கிராமத்து அழகி தான் அவள் அன்பிலும் சரி , அறிவிலும் சரி
சாமி சாமி என்றழைத்தே அவள் முகத்தை தரிசிக்க வைக்கும் தாயான என் மகள்.
சாமி சாமி என்றழைத்தே அவள் முகத்தை தரிசிக்க வைக்கும் தாயான என் மகள்.
Comments
Post a Comment