Skip to main content

மூடர்களா நாம் ?

மூடர்களா நாம் ?
சென்னையின் வெள்ளத்திற்கு சேரிகள் தொடங்கி சேர்த்து வைத்த அனைத்தையும் இழந்த பலதரப்பட்ட மக்கள் அங்கிங்கும் இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க , தமிழக அரசு வெள்ள நிவாரண கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆங்காங்கே பல அரசு அதிகாரிகளை கணக்கெடுக்க அனுப்பியுள்ளது.
அவர்கள் எடுத்த கணக்குகளின் படி நிவாரணம் அளிப்பதும் , நிர்கதியாய் விடுவதும் அரசின் போக்கு.
ஆனால் , வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு என்ற செய்தியை கேட்டதும் , வெள்ளத்தில் பாதிக்கப்படாத பல நல்ல உள்ளங்கள் தாமாக முன்வந்து வெள்ளத்தில் மொத்ததையும் இழந்தது போல் பாவனை செய்வதை தான் சற்றும் ஏற்று கொள்ளமுடியவில்லை.
உதாரனமாக , நான் வசிக்கும் இடத்தில் அவ்வளவு பாதிப்பு ஏற்படவில்லை. வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருந்த அந்த நான்கு நாட்களும் உணவுக்கு மட்டுமே தட்டுப்பாடு , மற்றபடி எந்த பொருட்களும் அடித்து செல்லபடவில்லை , உண்மையில் இங்கு வசிக்கும் அனைத்து சார்பினருக்கும் உடமைகள் அனைத்தும் சிறு கீரலின்றி வைத்தது வைத்த படி தான் இருந்தது.
இன்று எங்கள் பகுதியில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு , அதிகாலை முதலே ஆயத்தமாகிவிட்டனர் அவர்களின் நடிப்பை காட்டுவதற்கு , அவரவர் அவர்களின் தரத்திற்கு குறையாமல் உடமையை இழந்துவிட்டோம் , உயிரை பிடித்துவைத்துள்ளோம் என்று கூப்பாடு போட்டு தங்களின் உணர்வை எழுத்தாக அந்த அரசு அதிகாரியிடம் கூறினர்.
இதில் இடையிடையே பேச்சு வேறு , "சும்மா தர்ரத , வாங்க வலிக்காதூக்கும்" என்று
இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம் , இல்லை கிடைக்காமல் போகலாம். ஆனால் இது மாதிரி சென்னைவாசிகள் அனைவரும் செய்தால் , கணக்கெடுப்பு கணக்கெடுப்பு என்று சொல்லிக்கொண்டே காலம் கடந்து போகும்.
இல்லை , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது பகல் கனவாகவே மாறும்.
ஒன்று மட்டும் புரிகிறது , என் மக்கள் இன்னும் மாறவில்லை.
"சும்மா தர்ரத , வாங்க வலிக்குதா" என்ற வார்த்தையில் மலர்கிறது என் மக்களின் மூடத்தனம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!
இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள்.
பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர்.
தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ.
உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு.
எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!!
காவி என் நிறமல்ல என்கிறாய்,
கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய்.
திராவிடத்தை ஒதுக்குகிறாய்,
பகுத்தறிவை புகுத்துகிறாய்!!!
ஊரோடு கூடி வாழ்ந்தவர்
சட்டென்று மெளனம் கலைக்க
காரணம் தான் என்னவோ ?
இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும்
இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும்.
எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர்.
உங்கள் நிலைப்பாடு தான் என்ன உலகநாயகனே ?
தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பேசுகிறீர் …

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண்ணை போல ஆசையில் அ…

இரவல் வரிகள் - 01 (கார்க்கியின் ஒரு நாள் ரசிகன்)

காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய் என் கனவிரவே என் நிழற்பகலே
நிழலாய் அன்று நிஜமாய் நின்று  கொன்றாய் வென்றாய் பெண்ணே 
கனவாய் அன்று துணையாய் இன்று வென்றாய் கொன்றாய் கண்ணே 
இருள் உலகினில் இருக்கைகள் அமைத்து  ஒளிர் நிலவினில் இசையையும் சமைத்து மழையாய் நனைத்திடும் என் ஈரமாய் நீயே உறைந்தாயே  உன் இதழ் மொழி அசைவினை கண்டேன்  என் முதல் மொழி இருளினில் கொண்டேன் நான் கண் முழிக்கும் நேரம் அதை ரசித்தாயே இரவல் கேட்கிறேன் ஏன் ஒதுங்கி நீ சென்றாய் பெண்ணே  விழியில் ரசித்த நீ ஏன் நிழலினில் நகர்ந்தாய் முன்னே ஆராரோ பாட நீயும் இங்கே  உன் மேல்  சாயும் நேரம் எங்கே
காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய் என் கனவிரவே என் நிழற்பகலே
நிழலாய் அன்று நிஜமாய் நின்று  கொன்றாய் வென்றாய் பெண்ணே 
கனவாய் அன்று துணையாய் இன்று வென்றாய் கொன்றாய் கண்ணே
காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே!!!