Skip to main content

Posts

பனியோடு ஓர் நாள்

பனிவிழும் நேரத்தில் அதிகாலை ஈரத்தில் தனியே ஓர் பயணம். பண்டைய கால சித்திரம் போல பனிக்கு பயந்து கைகளை கட்டிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். யாருமில்லா சாலை அது , மரங்களும் செடிகளின், அந்த இரு இலைகளும் கூட ஆங்காங்கே மறைந்து தான் வளர்ந்திருந்தது. பெண்ணை பார்க்கா உதடுகள் கூட ஏனோ முதல் முறை பார்த்தது போல உற்சவத்தில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளும் பனியின் ஊடுருவல். எதிரே பெரியாரின் சிலையும் கண்ணாடி அணிந்த படி சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை புகைக்குள் என் உ தடுகள், முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு முண்டாசு கவிஞனின் நினைவாக தலைக்கும் காதிற்கும் முடிச்சு போடும் பாழடைந்த கம்பளி வேறு. நீல வான மேகத்தை ரசித்த படி மேலும் நகர, நீல வண்ண உடையணிந்த அம்பேத்கரின் சுவரொட்டி அழுக்காய் சுவற்றின் ஓரம் கேட்பாரற்றுகிடந்து. காவி கரைபடிந்த கட்டிட குவியலுக்குள் அதிகாலையில் தலைப்பாகை கட்டிய என் பயணம் , ஏதோ பல ஏக்கர் வயல் பரப்பிற்க்குள் விவசாயம் செய்ய கிளம்பும் உழவனை போல் இருந்தது தான், நிகழ்கால சிரிப்பின் உச்சக்கட்டம். நேரம் ஆக ஆக வெள்ள...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

இரவல் வரிகள் - 01 (கார்க்கியின் ஒரு நாள் ரசிகன்)

காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய் என் கனவிரவே என் நிழற்பகலே நிழலாய் அன்று நிஜமாய் நின்று  கொன்றாய் வென்றாய் பெண்ணே  கனவாய் அன்று துணையாய் இன்று வென்றாய் கொன்றாய் கண்ணே  இருள் உலகினில் இருக்கைகள் அமைத்து  ஒளிர் நிலவினில் இசையையும் சமைத்து மழையாய் நனைத்திடும் என் ஈரமாய் நீயே உறைந்தாயே  உன் இதழ் மொழி அசைவினை கண்டேன்  என் முதல் மொழி இருளினில் கொண்டேன் நான் கண் முழிக்கும் நேரம் அதை ரசித்தாயே இரவல் கேட்கிறேன் ஏன் ஒதுங்கி நீ சென்றாய் பெண்ணே  விழியில் ரசித்த நீ ஏன் நிழலினில் நகர்ந்தாய் முன்னே ஆராரோ பாட நீயும் இங்கே  உன் மேல்  சாயும் நேரம் எங்கே காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய் என் கனவிரவே என் நிழற்பகலே நிழலாய் அன்று நிஜமாய் நின்று  கொன்றாய் வென்றாய் பெண்ணே  கனவாய் அன்று துணையாய் இன்று வென்றாய் கொன்றாய் கண்ணே கா...

பயணக் காதல் - 03

பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வுகளை முடித்த நாளிலிருந்து, வீட்டிற்குள்ளும் சரி வெளியிலும் சரி அடுத்த என்ன படிக்கலாம் என்ற பேச்சை மீறி அடுத்து எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்ற பேச்சே ஆஸ்தானமாக விவாத பொருளாக மாறிக் கொண்டிருந்தது. எனக்கோ எந்த கல்லூரி என்பதை தாண்டி எந்த ஊரில் படிக்கலாம் என்ற சிந்தனை வெறித்தனமாக ஆழ் மனது வரை சென்று குடைந்து கொண்டிருந்தது. எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களின் Bio-Data - வை முழுதும் எடுத்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தேன்.  தெரியாத ஒரு விஷயத்தையும் தெரிந்தது போல் காட்டி பெற்றோர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் நாம். அதில் ஒரு அலாதி சுகம். நான் தேர்ந்தெடுத்த அந்த இரண்டு ஊர்கள் சென்னையும் கோயம்புத்தூரும் , அதில் என்னை அறியாமலையே நடந்த ஒரு சுவாரசியம், பாண்டிச்சேரியை நான் அதுவரை அறிந்திறாத என் சொந்தக்காரர் Refer செய்தது தான். சொந்தங்களிலும் சில நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். பிறகு , சென்னை மோசன ஊர் என்று என் மீது அக்கறை கொண்ட ,உறவினர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் விஷப்பூச்சிகள் கொளுத்...

பயணக் காதல் - 02

நேரம் சரியாக ஏழு மணி, இருள் சூழா பெளர்ணமி அது , சரி "வா போகலாம்" என்ற தொனியில், என் இருசக்கர வாகனத்திடம் தனியே பேசியபடி என்‌ வீட்டை நோக்கி கிளம்பினேன். வாகனங்கள் எல்லாம் வரிசைக்கட்டிய படி நெரிசலில் தவழ்ந்து கொண்டிருந்தது. "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற நம் அரசின் கோட்பாடு காலாவதியாகி கால் நூற்றாண்டு ஆன உணர்வு. வடித்தெடுத்த முட்டாள்கள் ஆங்காங்கே ஹாரன் அடிக்க, பிச்சைக்காரர்கள் "சார்" என்று ஆங்கிலத்தில் பிச்சை கேட்க, தூரத்தில் கரைவேட்டி, கட்சி கூட்டம் நடத்த, நம் நாடு வல்லரசு ஆனது போல் ஓர் நிழல் தோற்றம் என் கண் முன்னே. நேரம் ஆக ஆக நெரிசல் நீண்டு கொண்டே போனது. என் விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்த படி , அவளின் முகம் பார்த்த நொடி இமைக்காமல் நின்றது. மஞ்சள் நிற ஸ்கூட்டி அவளை ஆரத்தழுவி அணைத்து கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவில் நான் கண்ட அவளின் முகம், தேடினாலும் கிடைக்காத வரம். ஐபோனை கையில் எடுத்து எதையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் நெற்றிக்கு நடுவே, அவளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு. கிறுக்காத ஓவியம், கிறங்கடிக்கும் சிற்பமாய் என் ...

பயணக் காதல் - 01

பள்ளியின் முதல் நாள் தொடங்கி கல்லூரி இறுதி நாள் வரை தென்மாவட்டங்களின் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து சுவாசித்தவன் நான். சொந்த ஊரில் பகட்டாக வாழ்வதும் ஒரு வித போதை தான். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே பயணங்கள் பக்கத்து ஊர் செல்வதோடு முடிந்துவிடும். மிஞ்சிப்போனால் கல்யாணம், கருமாதி என்று அடுத்த மாவட்டம் வரை தொடரும். கல்லூரி நாட்களிலும் அதே நிலைமை தான் , அளவிற்கு அதிகமான பயணங்கள் , ஆனால் அளவான தூரத்தில் ஆர்ப்பரிக்க மட்டுமே. புத்தக வாசிப்பு நிச்சயம் ஒருவனை தேடலின் பயணத்தை நோக்க ி நகர்த்தி செல்லும் என்பதை ஆணித்தனமாக நம்பும் திராவிடன் நான். கல்லூரிக்குள் கனவுகளை தொலைத்து அதை தேடி சென்னைக்கு இரயில் ஏறிய கோமாளி பொறியாளர்கள் வரிசையில் கடைசிக்கு முந்தைய ஆளாய் நின்ற கடைநிலை பொறியாளன். முதல் முறை சென்னையில் என் சுவாசம், திருவிழா கூட்டத்தில் மாட்டிய திருடன் போல சென்ட்ரல் இரயில் நிலையத்தை வெறிக்க வெறிக்க அதிகாலை 3 மணிக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றும் தென்மாவட்டங்களில் அனேக ஊர்களில் இரவு 9 மணிக்கே விளக்கை அணைத்து, மின்சாரத்தை மிச்சம் செய்யும் பழக்கம் உண்டு. அதை பார்த்து வளர்...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ரகசியமே

ரகசியமே காத்திருந்த காலங்கள் கரைந்தோடட்டும்!! ஒரு வார்த்தை பேசி விடு!! நீண்டதொரு பயணத்தில் ரகசியமாய் நீயும் நானும் சென்று துலைவோம்!! துலைந்து திரிந்து தேடலின் சுவையை ரகசியமாய் உணர்வோம்!! உணர்ந்து உருகி காதலின் வலியை முதல் முறை அறிவோம்!! அறிந்து வியந்து சாதலின் வலியை அறுபதில் பெறுவோம்!! ரகசியமே காத்திருந்த காலங்கள் காறி உமிழுதடி அதற்காகவேனும் ஒரு வார்த்தை பேசி விடு !! # கிராதகனின்கனவு0 2

கற்பனை தகப்பன்

அவன் வித்திட்ட விந்தில் விதையாய் முளைத்தேன்! முதல் முத்த சத்தம் அவன் இதழ் வழி அறிந்தேன்! குருதி உடலுடன் என்னை தொட்டு பார்த்த முதல் விரல்! என்னை கரங்களால் கவர்ந்த முதல் அரண்! பிறண்டு கண்டதும் அவன் முகம் தான் தவழ்ந்து உருண்டதும் அவன் மடி தான் எட்டிட்டு கால் புரள தடமாக அவன் குனிந்தான் முதல் மொழி நான் பேச விழிவியப்பில் மனம் நனைந்தே போனான் காலங்கள் கரைந்தோட பள்ளியில்லா புத்தகத்துள் துலைந்தோட சொன்னான் திமிரெனும் தன்மானத்தை திளைக்காமல் காட்ட சொன்னான் நண்பனை நம்ப சொன்னான் துரோகியை விலக்க சொன்னான்! பிடித்தது அனைத்தையும் கண் இமைக்காமல் முடிக்க சொன்னான்! சாதிகள் இல்லையென்றான்! காதலும் வேண்டுமென்றான்! முடிந்த வரை உழைக்க சொன்னான் பிறர் பேச வாழச் சொன்னான்! உதவியில் புரள சொன்னான் விதி முடியும் வரை வாழச் சொன்னான்! தகப்பனாய் அவன் அளித்தான் என்  உயிரில் அதை செலுத்த சொல்லி!

கார்ப்பரேட் காதல்

KFC க்கு அருகே உள்ள அதே பேருந்து நிறுத்தம் தான் எந்த மாற்றமும் இல்லை அவளுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாய் உயிரில்லா கைப்பேசியை உயிர் போக தடவிக்கொண்டிருந்தான். கார்ப்பரேட் வாசல் இத்தலைமுறை காதலின் முதல் தொடக்கம். அதே போல் தான் அவனும் தன் தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருப்பில் ஆழ்ந்திருந்தான். நாகரீக காதலர்கள் அதிகம் உறவாடும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான். காலை,மாலை,இரவு என்று நேரங்கள் கடந்த காதல் கதைகள் இங்கு ஏராளம். காதல் தாண்டி , காமம் தாண்டி பிரிவை எதிர்நோக்கும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான். அவனின் அழகி அவனுக்கு அருகில் அதே பேருந்து நிறுத்தத்தில் தொடக்கத்தை துவங்கி வைக்க வந்துவிட்டாள். புருவங்கள் குறைத்து , முக அழகும் சிதைத்து , உதட்டோர சாயத்தில் , இறுக்கிய உடையில் பெண்ணியம் பேசிடும் மிடுக்கான பெண்ணாக அவன் அருகே அவள். ஒரு வாரம் முன்பு தான் அவளை முதல் முறை இதே பேருந்து நிறுத்தத்தின் அருகே பார்த்தான். இன்று இரண்டாவது முறை காதலிக்க துவங்கிவிட்டான்.அவளிடம் சொல்லியும் விட்டான். அவளும் அடுத்த காதலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இவனின்...

ஒரு நாள் காதலி

முதல் தடவ , நான் யாருன்னு எனக்கு காட்டுனா , அந்த ஒரு செகன்ட் , அந்த ஒரு வார்த்தை இதுவரைக்கும் அப்படி ஒரு feel ah நான் என் life la பாத்தது இல்ல. அந்த நிமிஷம் அவ ரொம்ப அழகா தெரிஞ்சா , அவ மட்டும்தான் அவ்வளவு அழகா தெரிஞ்சா , வோடாபோன் நாய் மாறி அவ பின்னாடியே போனேன்.  தேடி கண்டுபிடிச்சு at-least அவ சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு நன்றி ஆவது சொல்லனும்ல. ரொம்ப நேரம் கழிச்சு , என்ன லேசா பாத்தா சின்னதா சிரிச்சா , கண்லையே ஏதோ பேசுனா ஆனா எனக்கு ஒன்னும் புரியல. அதுக்கப்புறம் அவள பாக்கல , இப்பவரைக்கும் , ஆனா கண்டிப்பா ஒரு நாள் பாப்பேன் , அவ்வளுக்கான நன்றி இன்னும் எங்கிட்ட தான் இருக்கு , அத சொல்றதுக்காவது அவள பாப்பேன். #நன்றி01 #ஒருநாள்காதலி

கற்பனை வாழ்க்கை

எட்டு வருடங்கள் ஆகிறது நான் என் ஊரை விட்டு வேற்றூரில் தஞ்சம் புகுந்து.கடந்து போன எட்டு வருடத்தில் சொந்தங்கள் கடந்து நினைவில் வைத்து கொள்ளும்படி நிறைய நண்பர்கள் மட்டுமே சொந்தமாய் உடனிருந்திருக்கின்றனர். பதின் பருவத்தில் பதினொன்றாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை இன்றளவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு விடுமுறை முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில் ராஜாவாய் வலம் வந்த எனக்கு , விடுதி வாழ்க்கை புதிமையான அனுபவம் தான். தினமும் காலையில் "தம்பி , மணி 7 ஆக போகுது சீக்கிறம் எந்திருச்சு கிளம்பு" என்ற வார்த்தையில் தொடங்கி , சூடான இட்லியை ஊட்டிவிட்டு வழி அனுப்பவது வரை அனைத்துமே இன்றும் டைம் மெஷின் இருந்தால் நான் போக துடிக்கும் சுகமான நாட்கள். விடுதி வாழ்க்கை இவ்வன்பிற்க்கு நேர் எதிர். இரண்டடுக்கான இரும்பு கட்டிலில் சுகமின்றி உறங்கும் எங்களை , எழுப்ப தினமும் அதிகாலை 4 மணிக்கே பிரம்புடன் வந்துவிடுவார். எங்களை காக்கும் conjuring தெய்வம். பின் வரிசையில் நின்று அரைகுறையாய் குளித்து சரியாக 5 மணிக்கு படிக்கும் அறைக்குள் ஆஜராக வேண்டும். பிணவறைக்குள் கை கால்...

‪மெளனமான‬ ‪நினைவுகள்‬-1

ஒரு வார விடுமுறைக்கு பின் , முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அடுத்த செமஸ்ட்டரை எதிர்ப்பார்ப்போடு எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தோம். மீண்டும் அதே சிரிப்புடன் , சின்ன சின்ன சண்டைகளுக்கிடையே நாட்கள் நகர்ந்தது. இரண்டாம் செமஸ்ட்டரில் இருந்து வாரவிடுமுறையில் ஊர் சுற்றலாம் என்பது எங்கள் கல்லூரியின் தளர்த்தப்பட்ட விதி. அவ்விதி அமலுக்கான அடுத்தவாரமே பெரியதாய் சிந்தித்து முடிவில் படத்திற்கு போகலாம் என்பதை ஒருமனதாய் உறுதி செய்தோம். நண்பர்களுடன் முதல் பட அனுபவம் உண்மையில் எவ்வளவு அழகானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியா கவிதை அது. ஆனால் அக்கவிதையும் பிழையாகும் என்பதை அந்நாளே அறிந்து கொண்டோம். பெதுவாக பெண் தோழிகளுடன் படத்திற்க்கு சென்றாலே இங்கு உள்ள பல அழுக்கான உள்ளங்கள் தவறாக சிந்திக்கும் அதையும் தத்ரூபமாய் மற்றொருவரிடம் சித்தரிக்கும் என்பதை அதுவரை எங்கள் மனம் அறியவில்லை. கேலிகள் அதிகமாயின , அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் செவிகள் செவிடாய் இருந்ததே தவிர சந்தோஷத்தை இழக்கவில்லை. உண்மையில் நந்தினியும் , ஐஸ்வர்யாவும் அவர்கள் செய்யும் கேலியை ஒரு பெருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. நந்...

‎மெளனமான‬ ‪‎நினைவுகள்‬

நான்கு ஆண்டுகள் , ஆம் எனக்கு நினைவிருக்கிறது. கலைந்தோடும் காலங்களில் எனது நட்பும் சில்லரைக்காசாய் சிதறிப்போனது. நான் ராம்.பள்ளி எனும் இடுகுழியிலிருந்து தப்பித்து பொறியியலில் தலைநுழைத்த முற்போக்காளன். கல்லூரி வாசல் தான் பல புள்ளி கோலமாய் என்னை புதிய கோட்டிற்க்குள் இணைத்தது. கணிணி அறிவியல் என்பதால் பெண்களுக்குள்ளான பாகுபாடை மறந்து சமநிலை உணர்வை முதல்நாளே அவ்வகுப்பறை என் மனதில் பதித்தது. நான் மட்டுமல்ல என்னுடன் முதல் நாள் நட்பான தீலிப்பிற்க்கும் , சலீம்மிற்க்கும் அதே மனநிலை தான். அரட்டைகள் அரங்கேற்றமாகின , சிரிப்பிற்க்கு பஞ்சமில்லா காலமது. வாழ்க்கையின் சுகமான அனுபவங்களை கண்ணெதிரே கண்டு குதூகளித்து கொண்டிருந்தோம். மூவராய் சிரித்த உதடுகள் ஐந்தாகி போனது ஒரே மாதத்தில். நந்தினி என்ற நல்லவளும் , ஐஸ்வர்யா என்ற அடாவடியும் எங்கள் கைகளோடு விரல் கோர்த்த தருணம் அது , உண்மையில் நினைத்தாலே மனமெல்லாம் மழைச்சாரல் தெளிக்கிறது. நான்கு தலைகள் கல்லூரி விடுதிக்குள்ளும் , நந்தினி என்ற நல்லவள் மட்டும் வீட்டிற்க்குள்ளும் அடைக்கலமாய் அடைந்து கிடந்தோம். வகுப்பறை தான் எங்கள் சொர்க்கவாசல் , தி...

‪சாமானியனின்‬ ‪ஆதங்கம்‬

ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது. நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும். நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல. பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான். ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர். ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும். அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநி...

சாமானியனின்‬ ‪‎கேள்விகள்‬

நட்சத்திர காக்கிகளை கண்டாலே இப்பொழுதெல்லாம் கண்கள் தானாக வியர்கிறது. ஏன் என்ற கேள்விக்கு சொல்ல முடிந்த காரணங்கள் ஆயிரங்கள் இருப்பினும் , சொல்லாமல் நகர்வது தான் என் உடம்பிற்க்கு சிறந்தது. கரைவேட்டிகளுக்கு காவல் கொடுக்கும் உங்களை இகழ்ந்தவர்களை விட , அனுதாபத்தில் அயர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம். ஆனாலும் காரணங்களின்றி உங்கள் கைகள் , கண்டதும் சிலரை அடித்திடும். அதையும் என் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்திடும். அந்த சிலரும் ஏழ்மையின் பிடியில் வாடித்துடித்திடும் தரைநிலை வர்க்கங்கள். யாரேனும் கேட்டாலோ , அவனுக்கும் அதே நிலைதான். மேல்நிலை வர்க்கத்தை கண்டாலே பம்பி பதுங்கும் உங்கள் விழிகள் , தரைநிலை வர்க்கம் என்றவுடன் தாவிகுதித்து அவர்களை பந்தாடுவது ஏன்? காவல் துறை உங்கள் நண்பன் என்ற உங்கள் வாசகத்தை மறுமுறையேனும் பரிசீலித்து கொள்ளுங்கள். நடப்பவை யாவும் நண்பன் என்ற சொல்லை தகர்த்து சொல்லமுடியா சொற்களை மண்டைக்குள் ஏற்றுகிறது. அடக்குமுறை என்ற பெயரில் பணமில்லா மனிதத்தை அடித்து அடிமை படுத்துவதற்க்கு எதற்கு சுதந்திரம் ? ஆங்கிலேயன் பிடியிலேயே அடிமையாய் இருந்திருப...

‪‎மனிதம்‬

மனிதம் மறைந்ததா ? இல்லை மடிந்ததா ? மறைந்தது என்றால் மறைத்தது யார்? மடிந்தது என்றால் அழித்தது யார்? தன் நலத்தை தேடும் அவனின் ஆறறிவு அழித்ததோ ? இல்லை , தற்பெருமை பேசும் அவனின் நாவறிவு மறைத்ததோ ? உடலில்லா மனதிற்க்கு வஞ்சபுகழ்ச்சி ஏராளம் அறுபட்ட உடலிற்க்கு வஞ்சக இகழ்ச்சி தாராளம் பிஞ்சென்று பாராமல் பிஞ்சிலே தோலுரிப்பான் பின்னூட்ட நிகழ்வையெல்லாம் ஒளித்திரையில் ஏற்றி வைப்பான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடிப்பட்டு கிடந்தாலோ அமைதியாய் நகர்ந்திடுவான் அதைவைத்து கதைபேசி ஒரு வாரம் கடந்திடுவான் பணமான கல்விக்குள் மனிதத்தை மறைத்திடுவான் கல்வியின் பணத்திற்க்கு மனிதத்தை அழித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடுப்பூதும் பெண்களையும் அரியணையில் ஏற வைப்பான் அதில் உள்ள சூழ்ச்சிகளை அவன் மட்டும் அறிந்திருப்பான் உதவியென்று கேட்டாலோ உமிழ்ந்தபடி சிரித்திடுவான் ஊர்உலகம் எல்லாவும் அவன் செய்ததாய் பறை அடித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? சாதியென்று சாமியென்று சங்கத்தை பிரித்திடுவான் காதலிக்கும் ஜோடிகளை கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான் ஏழையென்று அறிந்தாலோ ...

கல்லரை கனவுகள்

கனவுகளை தேடி தேடி கரை படிந்த படிகமானேன் கனவிற்கு ஓர் உயிர் இருந்திருந்தால் கதறி துடித்திருக்கும் கருணையும் அழுதிருக்கும் உயிரில்லா ஜடத்திற்க்கு உயிரூட்ட ஓர் ...

‪கேப்டனிடம்‬ ‪சாமானியனின்‬ ‪கேள்விகள்‬

கேப்டன் என்ற இந்த பெயரில் தான் விழுந்தது என் சமகால இளைஞர் தலைமுறை. இன்றுவரை உங்கள் படங்களினால் ஈர்க்கப்பட்ட பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். 2005 இல் நீங்கள் முழுநேர அரசியலில் முழுமையாய் இறங்கிய போது தமிழ்நாடு மாறிவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத்துப்போனேன். அந்நாளில் தமிழக மக்களின் பெருவாரியான எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. 2006இல் நடந்த தேர்தல் தான் உங்கள் கட்சிக்கான முதல் அங்கீகாரம். அடையாளம் என்றும் கூட சொல்லலாம். ஆளுமையில் உள்ள கட்சிகளே கூட்டணியை தேடி அழைந்த போது ,234 தொகுதியிலும் தனித்து நிற்பதாய் மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தீர்கள். உங்களின் துணிச்சலான அந்த முடிவிற்க்கு பலனும் கிடைத்தது. கட்சி தொடங்கிய எட்டே மாதங்களில் பொது தேர்தலை தனித்து சந்தித்து 30 இலட்சம் வாக்காளர்களை கொத்தாக அள்ளினீர்கள். அந்த 30 இலட்சத்தில் இளைஞர் கூட்டம் மிக அதிகம். அரசாண்ட கட்சிகள் அனைத்தும் வாயடைத்து போனது. அரசியல் விமர்சகர்களையே அதிர வைத்த தேர்தலாக அது அமைந்தது. இடைப்பட்ட காலங்களில் (2006-2009) உங்களின் செய்கை சரியான பாதையில் கச்சிதமாய் சென்று கொண்டிருந்தது. அதுவரை இணைய உ...

‪நெடுநாள் தவம்‬

காற்றடைத்த குமிழிக்குள் கயவன் போல் என் உருவம்... கை , கால்கள் அசைகிறது சண்டையிட துடிக்கிறது... கழுத்தின் ஓரம் சுற்றப்பட்ட கயிற்றின் ஈரம் என்னை பதபதைக்க வைக்கிறது... பயத்தில் உறைந்தவனாய் அசையாமல் படுத்திருந்தேன்.. எங்கோ ஓர் கதறல் என் காதுகளை செவிடாக்கியது.. அந்த அலறல் மிகுந்த கதறலில் என் உடல் தானாக ஆடியது... கத்தி முனையில் என் உயிர்... கழுத்தை நெருங்கிய கத்தியின் கூர்மை கழுத்தை தவிர்த்து அக்கயிற்றை அறுத்தது... நினைவிழந்த என் உடலில் ஏதோ ஓர் உணர்வு.. நீருக்குள் இருந்த நெடுநாள் தவமும் அன்றோடு கலைந்தது.. சிசுவாய் இருந்த எந்தன் மனமும் உயிர்ப்பெற்றெழுந்தது...